×

ஆதரவாக இருப்பதுபோல் நடித்து தம்பதிகளை பிரிப்பு; திருமணமான பெண்களை வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்த காதல் மன்னன் கைது: வீடியோ எடுத்து பணம் பறித்ததும் அம்பலம்

திருமலை: திருமணமான பெண்களையே குறிவைத்து காதல் வலை வீசி பணம் பறித்து உல்லாசமாக இருந்த காதல் மன்னன் கைது செய்யப்பட்டான். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (31). இவர் வேலை நிமித்தமாக தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள லாலகுடாவிற்கு சென்றபோது அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லையாம். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு இளம்பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. அவரிடம் அடிக்கடி அன்பாகவும், ஆதரவாகவும் பேசி காதல் வலையில் வீழ்த்தி  அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். அவ்வப்போது ஏதாவது ஒரு காரணத்தை கூறி பணம் பறித்துள்ளார். இதனால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரகசியமாக கண்காணித்தபோது,  திருமணமான பல ெபண்களை ரங்கசாமி  ஏமாற்றியது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த இளம்பெண், லாலகுடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் வழக்குப்பதிந்து தேடியபோது,  ஐதராபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் ரங்கசாமி கோவா சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சரியான வேலை கிடைக்காததால் விரக்தியடைந்த ரங்கசாமி சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு திருமணமான அதிக சம்பளத்தில் ேவலை பார்க்கும் பெண்களை குறி வைத்துள்ளார். அவர்களிடம் முதலில் நட்பாக பேசி வீட்டில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொண்டு ஆதரவாக இருப்பதுபோல் காதல் வலையில் விழ வைத்துள்ளார். அவ்வாறு  சிக்கும் பெண்களிடம் உல்லாசமாக இருந்ததோடு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காக, கணவன்-மனைவி இடையே பிரச்னைகளை ஏற்படுத்தி வந்துள்ளார். இதில் சிலர் தனது கணவரை விவாகரத்தும் செய்துள்ளனர்.  பாலியல் ரீதியாக ஆசை தீர்ந்த பிறகு, பணத்தை ஏமாற்றி வாங்கிக்கொண்டு வேறு பெண்ணிற்கு வலை வீசுவதையே தனது பொழுது போக்காக வைத்துள்ளார். பல பெண்களிடம் காதல் லீலையில் ஈடுபட்டுள்ளார்.  போட்டோ மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.  இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ரங்கசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். …

The post ஆதரவாக இருப்பதுபோல் நடித்து தம்பதிகளை பிரிப்பு; திருமணமான பெண்களை வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்த காதல் மன்னன் கைது: வீடியோ எடுத்து பணம் பறித்ததும் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Kadhal Mannan ,
× RELATED நர்மதா நதியில் குளிக்கச் சென்ற ஒரே...